விக்கெட் கீப்பராக ரன்களில் தன்னைக் கடந்த தோனிக்கு கில்கிறிஸ்ட் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் எடுத்த ரன்களில் கில்கிறிஸ்டின் 15,461 ரன்களை தோனி கடந்துள்ளார்.

இந்தச் சாதனை முறியடிப்புக்காக ஆஸ்திரேலிய முன்னாள் அதிரடி பேட்ஸ்மென்/ விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அன்று 4-வது ஒருநாள் போட்டியில் தோனி கடந்த 16 ஆண்டுகளில் மிக மிக மந்தமான அரைசதத்தை எடுத்து எதிர்மறை விமர்சனத்துக்குள்ளான இன்னிங்ஸில் 54 ரன்களை எடுத்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 15,481 ரன்களை எட்டினார். ஒருநாள் போட்டிகளில் 9,496, டெஸ்ட் போட்டிகளில் 4,876, டி20 போட்டிகளில் 1209 ரன்கள்.

இந்நிலையில் பாராட்டு தெரிவித்த கில்கிறிஸ்ட், தனது சமூக வலைத்தளத்தில், “என் சாதனையை கடந்ததற்கு வாழ்த்துக்கள், வாஸ் ஆல்வேஸ் எ மேட்டர் ஆஃப் டைம்” என்று பதிவிட்டுள்ளார்.

கில்கிறிஸ்டைக் கடந்து தோனி சென்றாலும் சங்கக்காராவைக் கடக்க இன்னும் கொஞ்சம் பிரயத்தனம் தேவை.

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here