நடிகை பாவனா கடத்தல் வழக்கு: போலீஸ் வளையத்தில் பெரிய சுறாக்கள் சிக்கும் – கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் பரபரப்பு தகவல்

நடிகை பாவனா கடத்தல் வழக்கு தினமும் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுனிலின் காவல் முடிந்ததை அடுத்து நேற்று அனகமலி நீதிமன்றத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவரது வழக்கறிஞர் அலூர் கூறும்போது, ‘சிறையில் இருந்து சுனில் வெளியே வந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை’ என்றார். இந்நிலையில் அவரது காவல் ஜூலை 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்போது செய்தியாளர்களிடம் சுனில் கூறுகையில், ‘இந்த வழக்கில் பெரிய சுறாக்கள் சிக்கும்’ என்றார்.

முன்னதாக வழக்கில் தொடர்புள்ள தாகக் கூறப்படும் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப், இயக்குநர் நாதிர்ஷா, திலீப்பின் மேலாளர் அப்புண்ணி ஆகியோரிடம் போலீஸார் 13 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் திலீப்பின் மனைவி காவியா மாதவன் அலுவலகத்திலும் போலீஸார் சோதனை நடத்தினர்.

வழக்கை தலைமையேற்று விசா ரிக்கும் காவல் கூடுதல் இயக்குநர் பி.சந்தியா கூறும்போது, ‘வழக்கில் சதி பின்னணி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது’ என்றார்.

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here