ஆதாருடன் இணைக்காவிட்டாலும் பான் அட்டை எண் செல்லும்

ஆதாருடன் இணைக்காவிட்டா லும் பான் அட்டை எண் செல்லும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய நேரடி வரி விதிப்பு ஆணை யத்தின் (சிபிசிடி) தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1-ம் தேதி முதல் கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் பல லட்சம் பேர் ஆதார் எண், வருமான வரி கணக்கை இணைக்க முயன்று வருவதால் இணையத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆதார் எண் செல்லாததாகி விடும் என்ற வதந்தியால் மக்களிடையே அச்சம் நிலவிவருகிறது.

இதுதொடர்பாக சுஷில் சந்திரா கூறுகையில், “மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை. ஜூலை 1-ம் தேதி முதல் உங்க ளுடைய பான் எண் செல்லுபடி யாகும். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1-ம் முதல் கட்டாயம்தானே தவிர அதற்கான காலக்கெடு பிறகு அறி விக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

வருமான வரி சட்டம் 139ஏஏ (2)-ன் படி, வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் யாருக் கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வரித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

Comments

comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here